அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், கூட்டணி குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றைக் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

5 நாள்; 114 மணிநேர தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்த மமதா!

SSLC பொதுத்தேர்வுகள் துவங்கியது! ஏப்.6 வரை நடைபெறுகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

சிலிண்டர் தட்டுப்பாடு! அலைமோதும் மக்கள்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

