சென்னை விமான நிலையத்தில் ரூ.39.82 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.39.82 லட்சம் மதிப்பிலான 867 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.39.82 லட்சம் மதிப்பிலான 867 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணியை சோதனையிடும் போது, மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.39.82 லட்சம் மதிப்பிலான 867 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...