பாஜகவுக்கு 2 அல்லது 3 தொகுதிகள்தான் கிடைக்கும்: சுப்ரமணியன் சுவாமி

அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து கூட்டணி கட்சியிடம் சீட்டுக்காக மன்றாடுவதை ஏற்க முடியவில்லை என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி


திருப்பதி: அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து கூட்டணி கட்சியிடம் சீட்டுக்காக மன்றாடுவதை ஏற்க முடியவில்லை என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி புதன்கிழமை காலை திருப்பதி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, 'நான் இம்முறை தமிழக தேர்தலில் அதிக முனைப்பு காட்டவில்லை. அதனால் தமிழ்நாட்டு பக்கம் செல்லவில்லை. கூட்டணிகள் குறித்தும் கவலை கொள்ளவில்லை. பாஜக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தன்னந்தனியாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் போட்டியிடும் போது பல இடங்களில் டிபாசிட் இழந்தாலும் 2 அல்லது 3 தேர்தல்களை எதிர்கொண்டால் மேற்கு வங்கத்தில் பாஜ கட்சிக்கு என தனி அங்கீகாரம் கிடைத்தது போன்று தமிழகத்திலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

ஆனால் கூட்டணி என்று கூறிக் கொண்டு 20, 30 தொகுதிகளைப் பேசிக் கொண்டு அகில இந்திய கட்சியான பாஜக அடிமை போல் அடுத்தவரிடம் சீட்டுக்காக கையேந்தி நிற்பது ஏற்க முடியவில்லை. அவ்வாறு கூட்டணி வைத்தாலும் பாஜ கட்சிக்கு கிடைப்பது 2 அல்லது 3 மட்டுமே. கடந்தாண்டு அது கூட கிடைக்கவில்லை. அதனால் இந்தாண்டு தமிழக தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி விட்டேன். எனவே, அது குறித்த கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியது அவரின் தனிப்பட்ட முடிவு. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் அன்றே கூறியிருந்தேன். அது நடந்து விட்டது என்று கூறிய அவர், கமல்ஹாசன் குறித்து கேட்ட போது அவர் அரசியிலில் ஈடுபட்டு வருகிறாரா? என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com