மானாமதுரையில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மானாமதுரை (தனி )தொகுதி அமமுக வேட்பாளராக எஸ். மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார். இவர் அமமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் தேர்தல் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தனலெட்சுமியிடம் மாரியப்பன் கென்னடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் குரு. முருகானந்தம் உடனிருந்தார்.
பின்பு மாரியப்பன் கென்னடி செய்தியாளர்களிடம் கூறியதாவது; மானாமதுரை தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் பண பலத்தை நம்பி போட்டியிடுகின்றனர். நான் மக்கள் பலத்தை நம்பி போட்டியிடுகிறேன். தேர்தலில் வென்றவுடன் மானாமதுரை தொகுதியில் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...