புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூ. தனித்துப் போட்டி
புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.


புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
கூட்டணியில் தொகுதி ஒதுக்காததால் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் போட்டியிட முடிவு செய்து உள்ளனர். இதற்கான வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. கூட்டணியில் தொடர்வதாகவும், முத்தியால்பேட்டை ஒரு தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம் தெரிவித்தார். இதனால் புதுவை காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...