எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது: கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

News image
கே.எஸ்.அழகிரி
Updated On :19 மார்ச் 2021, 10:45 am

DIN

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி,

நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளேன். தமிழகத்தில் விரைவில் ஒரே மேடையில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர். தமிழகத்தில்  

இந்த தேர்தலின் முக்கிய கருப்பொருள் என்னவென்றால் தமிழ்நாட்டை தமிழகம் ஆள வேண்டுமா, தில்லி ஆள வேண்டுமா என்பதே.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் தமிழகத்தை தமிழகம் ஆளும், ஸ்டாலின் ஆள்வார். கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் துணை நிற்போம். இல்லையெனில் தமிழகத்தை பாஜகதான் ஆளும். 

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நிற்கவில்லை; 234 தொகுதிகளிலும் அதிமுக மூலமாக பாஜகதான் நிற்கிறது.

நீட் தேர்வாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இயற்கைப் பேரிடரின்போதும் சரி  மத்திய அரசிடம் இருந்து எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை.

மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதில் உறுதியாக இருக்கிறது. 
சமஸ்கிருதத்திற்கு அவர்கள் ஒதுக்கி இருக்கும் தொகை சுமார் 300 கோடி ரூபாய். ஆனால் தமிழுக்கு ஒதுக்கியுள்ள தொகை மிகமிகக் குறைவு. இதுகுறித்து அதிமுக தான் கேட்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு கேட்கத் தைரியம் இல்லை. நாட்டில் பன்முகத் தன்மையை அகற்ற பாஜக முயற்சிக்கிறது. அதிமுக அதற்கு துணை போகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.