திருநங்கைகளுக்கு செவிலியர் வேலைவாய்ப்பு: த.மா.கா. தேர்தல் அறிக்கை
திருநங்கைகளுக்கு செவிலியர் பயிற்சி தந்து மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்று த.மா.கா. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருநங்கைகளுக்கு செவிலியர் பயிற்சி தந்து மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்று த.மா.கா. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பட்டுக்கோட்டை, திருவிக நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் தொகுதிகள் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் இத்தொகுதிககளில் தமாகா, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் த.மா.கா.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார்.
அதில், விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களின் பலன் இடைத்தரகர்களிடம் செல்லாமல் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவோம்.
• நஷ்டத்தில் இயங்கும் தொழில்களை, லாபகரமாக செயல்படவும், அதன்மூலம் தொழிலாளர்கள் நலன்பெறவும் நடவடிக்கை எடுப்போம்.
• தற்பொழுதுள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தாமல், படிப்படியாகக் குறைக்க பாடுபடுவோம். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்.
• கட்டணப் பள்ளிகளுக்கு புதிய அனுமதி வழங்காமல் நிறுத்திவிட்டு, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் சிறந்து விளங்க பாடுபடுவோம்.
• திருநங்கைகளுக்கு செவிலியர் பயிற்சி தந்து மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவோம்.
• தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை பாதுகாக்க, அதனை பக்தர்களிடமே ஒப்படைத்து, நிர்வாகம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் த.மா.கா. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...