எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ராணுவ கேன்டீன் போல மக்கள் கேன்டீன்: மநீம தேர்தல் அறிக்கை

ராணுவ கேன்டீன் போல, நியாய விலையில் பொருள்களை விற்பனை செய்ய மக்கள் கேன்டீன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

News image
ராணுவ கேன்டீன் போல மக்கள் கேன்டீன் திட்டம்: கமல் அறிவிப்பு
Updated On :19 மார்ச் 2021, 11:13 am

DIN


கோவை: ராணுவ கேன்டீன் போல, நியாய விலையில் பொருள்களை விற்பனை செய்ய மக்கள் கேன்டீன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் நடைபெற்ற நிகழ்வில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது: 

ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளுக்கு பேண்டேஜ் போடுவது இல்லை எங்கள் தேர்தல் அறிக்கை. இது தொலை நோக்கு பார்வையுடன் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை. 

நல்ல திட்டங்களை நிறைவேற்றிவிட்டாலே தமிழகம் முன்னேறிவிடும்.

இலவசம் என்பது அரசியல் கட்சிகள் மக்களுக்கு கொடுப்பதில்லை. வாஷிங் மிஷனை நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக தான் அர்த்தம். இதற்கான பில் உங்கள் தலையில் தான் வரும்.

தமிழகத்தின் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் அடைக்கப்பட்டு வளமாக்கப்படும்.

போக்குவரத்து துறை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப்படும். அதற்கு என்ன வழி போக்குவரத்து ஊழியர்கள் பங்குதாரர்களாக ஆக்கப்படுவார்கள்.

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000, ரூ.1500 தருகிறேன் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம். நாங்கள் அவர்களது திறமைகளை கண்டறிந்து அதை ஊக்குவித்து அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்வோம்.

இது ஒரு தனித்துவமான தேர்தல் அறிக்கை. மக்கள் கேண்டீன் திறக்கப்படும். இது மக்களுக்கு தேவையானவற்றை நல்ல விலையில், நியாயமான விலையில் தரப்படும். இதுவும் அம்மா உணவகமும் ஒன்றல்ல.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுமே மோனோ, மெட்ரோ ரயில் திட்டங்கள் வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் ஒடும். தலைநகரம் மட்டும் செழிப்பாக இருந்தால் போதாது. அனைத்து மாவட்டகளும் செழிப்பாக வேண்டும்.

அமைப்பு சார தொழிலாளர்கள் ஒரு அமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று சட்டத்தில் இல்லை. எனவே, மருத்துவப் படிப்புக்கு எஸ்இஇடி தேர்வு நடத்தப்படும்.

வரி வருவாயை மட்டுமே நம்பியிருக்க மாட்டோம், வளர்ச்சியை ஏற்படுத்தி வருவாயை பெருக்குவதே லட்சியம்.

அப்துல் கலாமின் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும்.

நேர்மையாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 2 - 5ஆண்டுகள் பணி நீட்டிப்பு.

Story image

ஆசிரியர்களுக்கு இப்போது இருக்கும் சம்பந்தமில்லாத வேலைப்பளு முற்றிலும் அகற்றப்படும். ஆசிரியர்கள் ஆசிரியப் பணி மட்டும் பார்த்தால் போதும்.

மாணவர்கள் கல்வி கடன் பெறுவதும் திரும்ப செலுத்துவதும் எளிதாக்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து வசதி.

தனியார் மருத்துவ கல்லூரிகள்     அரசு மருத்துவமனைகளை, ஆரம்ப சுகாதார நிலையங்களை தத்து எடுக்க நடவடிக்கை.

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று கமல் அறிவித்தார்.

மநீம பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. அவரும் ஒரு தனி நபர் தான். மநீம என்பதால் கணக்கு எண்ணிக்கை அதிகமாக காட்டப்படுகிறது. அவர் மீது எழும் புகார் தனி நபர் மீது உள்ள புகார் என்றார் கமல்.

கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளித்து பேசியதாவது:

வரி வருமானத்தில் இருந்து வளர்ச்சியின் பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய தேர்தல் அறிக்கை இது. விவசாயத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேறி செல்லக்கூடிய அறிக்கை.

50 லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்தல் அறிக்கை 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வை.
ஏழ்மை ஒழிக்கப்பட்டு வறுமை ஒழிக்கப்பட்டு வளம் கிடைக்கக்கூடிய தேர்தல் அறிக்கை.

தனி நபர் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும்.

ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். மாதம் ரூ.60 ஆயிரம் கிடைக்கும் வரை வருமானம் உயர்த்தப்படும். தற்போது ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே உள்ளது.

சமூக நீதி என்பது அனைவருக்குமானது. அனைவருக்கும் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு. ஆசிரியர்கள் வேறு பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். படித்த படிப்புக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வின் போது மநீம துணை தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.