ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மருங்காபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

மருங்காபுரி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். 

News image

தேர்தலை புறக்கணித்து வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்

Updated On :24 மார்ச் 2021, 11:21 am

DIN

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது கலைஞர் நகர் பகுதி. இன்று காலை அங்குள்ள குடியிருப்புகளில் கறுப்புக் கொடி கட்டி, குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தினை கண்டித்து தேர்தலைப் புறக்கணிப்பதாக ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

இப்பகுதியில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 40 வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது குடிநீர் குழாயினை அருகே உள்ள சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்தவர் உடைத்து விட்டதாகவும், இதுகுறித்து கஞ்சநாயக்கன்பட்டி தலைவர் ஏதும் கேட்கவில்லை என்று புகார் கூறும் கலைஞர் நகர் பொதுமக்கள்,

ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு தொட்டிகளில் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், அவை அப்பகுதி மக்களின்  குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

தேர்தலை புறக்கணித்து வீட்டில் கறுப்புக்கொடி

தேர்தலை புறக்கணித்து வீட்டில் கறுப்புக்கொடி

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடமும், ஒன்றிய ஆணையர் மற்றும் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரகம் ஆகியற்றில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எனக் கூறி நாங்கள் அகதிகளா என்று தெரியவில்லை, பஞ்சாயத்து நிர்வாகம் எங்களை ஏன் புறக்கணிக்கிறது? இதற்குமேல் போராட எங்களுக்கு சக்தியில்லை என்றும் எங்களுடைய  கடைசி போராட்டம் இதுதான் என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நேரில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.