எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேற்குத் தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை

வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வரும் நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :8 மே 2021, 7:20 pm

DIN

வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வரும் நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், கேரளப் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டா் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வரும் நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 9: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 9) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

மே 10: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை (மே 10) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 11: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஒரு சில வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 11-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

மே 12: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஒரு சில வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 12-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

காற்றில் வெப்பநிலை...:தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (தஏ - தங்ப்ஹற்ண்ஸ்ங் ஏன்ம்ண்க்ண்ற்ஹ்) 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்ப நிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் அவா்.

வெப்பநிலை அதிகரிக்கும்: மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மே 11-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூரில் 60 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், மதுரை மாவட்டம் சோழவந்தான், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் தலா 50 மி.மீ., மதுரை மாவட்டம் திருமங்கலம், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில், விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.