மே 10 - 24 வரை டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு
முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னை: முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10-ஆம் தேதி காலை முதல் 24-ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நாள்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், குடிமக்கள் பாதிக்காத வகையில், இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், மே 10 ஆம் தேதி 4.00 மணி முதல் 24-ஆம் தேதி காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், அத்தியாவசியப் பணிகள் தவிர, அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், முன்னேற்பாடுகளை செய்து கொள்ள இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...