மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக்: சனி ரூ.426.24 கோடிக்கும், ஞாயிறு ரூ.428.69 கோடிக்கும் மது விற்பனை

தமிழகத்திதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 மே 2021, 4:57 am

DIN

தமிழகத்திதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது. முழு பொதுமுடக்கம் காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்தது. 

இதனால், மக்கள் சனி, ஞாயிறுகிழமைகளில் மளிகை, காய்கறி உட்பட அனைத்து கடைகளிலும் அதிகளவில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். அதே போல், டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் மதுப்பிரியா்கள் மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா். இந்த நிலையில், தமிழகத்திதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.428.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.98.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் ரூ.97.62 கோடிக்கும், திருச்சியில் 87.65 கோடிக்கும், சேலத்தில் ரூ.76.57 கோடிக்கும், கோவையில் 67.89 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. சனிக்கிழமை ரூ.426.24 கோடிக்கு மதுவிற்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று ரூ.428.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.