முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்றது. இதில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துக்கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்போவதில்லை என முடிவு.
கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்படும். முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
நோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு தனியார் மருத்துவமனைகளில் இருந்து வருபவர்கள் ஆம்புலன்ஸ்களில் உயிரிழக்கின்றனர். நோய் தீவிரமடைந்த பிறகு அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற செயல். உற்பத்தி அதிகரித்தவுடன் கூடுதலாக ரெம்டெசிவிர் அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

