/

சீர்காழியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.     

News image
சீர்காழியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்
Updated On :18 மே 2021, 8:04 am

DIN

சீர்காழி: சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது     

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த கொடிய நோயினைக் கட்டுப்படுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோவிலின் சார்பாக ஊரடங்கு காலத்தில் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் கோயில் வாசலில் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.

இதைப்போல் இன்று தொடர்ந்து மூன்றாவது வாரமாக நாகேஸ்வரமுடையார் கோயில் செயல் அலுவலர் பொன் மாரிமுத்து  மற்றும் மேலாளர் ராஜ் ஆகியோர் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.