சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வாட்ஸ்ஆப் மூலம் 12-ம் வகுப்பு அலகுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:15 pm

DIN

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.

அதில், வாட்ஸ்ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே குழுக்களை உருவாக்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள் அனுப்ப வேண்டும், 

விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும். 

வாட்ஸ்ஆப் குழுவின் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், விடியோக்களை பதிவிடக் கூடாது.

ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.