கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

யாஸ் புயல் எதிரொலி: நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 மே 2021, 1:27 pm

DIN

தூத்துக்குடி, நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (மே24) புயலாக மாறி வலுப்பெறுகிறது. இது திங்கள்கிழமை (மே 24) தீவிரமடைந்து ஒடிஸா, மேற்கு வங்க கடற்கரையை நோக்கி கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக சென்னை மற்றும் தெற்கு அந்தமான் மேலும் வடக்கு அந்தமான் ஆகிய இடங்களில் பலத்த மழை செய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் தூத்துக்குடி, நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை எண்ணூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை யாஸ் புயலாக வலுவடையும் நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.