கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மே.26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.95.06, டீசல் ஒரு லிட்டர் ரூ.89.11 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

News image

petrol051505

Updated On :26 மே 2021, 3:35 am

DIN

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.95.06, டீசல் ஒரு லிட்டர் ரூ.89.11 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. கரோனா தொற்று காலத்தில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. 

கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.95.06, டீசல் ஒரு லிட்டர் ரூ.89.11 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

தலைநகர் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.44 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.84.32 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99.71 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.57 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.93.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.87.16 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா தொற்று காலத்தில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

பெட்ரோல், டீசல் உற்பத்தி விலை அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்குதான் என்றும், மீதம் இருப்பது மத்திய , மாநில அரசுகளின் வரிகளே என்று கூறப்படுகிறது.  இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைக்க முன் வரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.