அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஊரடங்கால் கரோனா குறைந்துள்ளது; ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: மு.க.ஸ்டாலின்

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின்
Updated On :26 மே 2021, 7:26 am

DIN


திருவள்ளூர்: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கரோனா  பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இப்பணிகளை தமிழக முதலைவர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

Story image

கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புடன் இருக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

ஊரகப் பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த கரோனா வைரசின்  தொடர் சங்கிலியை உடைக்க  அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக முழு தளர்வு இல்லா பொதுமுடக்கம் உத்தரவு போடப்பட்டது.

இதற்கு இரண்டு நாள்களில் நல்ல பயன் வந்துள்ளது. சென்னையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு பயன் தரும். பொதுமக்கள் விதிமுறைகளை மீறி வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

மக்களை காக்கும் பணியில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையும், போதிய மருந்துகளும் இருப்பில் உள்ளது. கடந்த 6-1 -2021 முதல் இன்று வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்தும் கடந்த கால ஆட்சியில் கரோனா வைரஸ் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக இரண்டாவது  அலை ஏற்பட்டு உள்ளது. இந்த  இரண்டாவது அலையை தமிழக அரசு வெற்றிகரமாக முடித்து சங்கிலியை உடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து அரசு ஆதரவளிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 61 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 267 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் நல்ல ஆயுதம். கரோனா  வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் இந்த தொற்றினை உடைக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அனைவரையும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். 

தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் தொற்று தாக்கினாலும் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் தங்களைக் காக்கும் ஆயுதமாக  இந்த தடுப்பூசி இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.