தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், தேவைப்பட்டால் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கட்டாயம் நீட்டிக்கப்படும் என்று பதிலளித்தார்.
மேலும், பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...