மன்னார்குடியில் தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ள மூதாட்டி சரஸ்வதி வசித்து வந்த கூரை வீடு.
மன்னார்குடியில் தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ள மூதாட்டி சரஸ்வதி வசித்து வந்த கூரை வீடு.

மன்னார்குடியில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

மன்னார்குடி பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து மழையால் மன்னார்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
Published on

மன்னார்குடி பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து மழையால் மன்னார்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், மன்னார்குடி அன்னவாசல் சேணியக் தெரு, முத்துமாரியம்மன் கோயில் சந்தில் உமா மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மண் சுவர் கூரை வீட்டில் சரசு என்ற சரஸ்வதி (97) மூதாட்டி நீண்ட காலமாக  வசித்து வருகிறார். கணவர் பல ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். வாரிசுகள் இல்லை என்பதால் சரஸ்வதி மட்டும் தனியே இருந்து வந்துள்ளார்.

தொடர் மழையால் அவர் வசித்துவந்த கூரை வீட்டின் மண் சுவர் மழை நீரால் ஊறி பலவீனமடைந்து இருந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மூதாட்டி சரஸ்வதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய சரஸ்வதி உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இடிந்து விழுந்த வீட்டை, மன்னார்குடி நகராட்சி ஆணையர் கே. சென்னுகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் , வட்டாட்சியர் ஜீவானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com