கனமழை எதிரொலி: சென்னையில் நாளை(நவ.11) புறநகர் ரயில் சேவை குறைப்பு
தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.


தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
நாளை(நவ.11) ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நாளை வரை கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தொடர் மழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை (வியாழன்) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...