மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் புதியதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்த பொதுமக்கள்.
Updated On :12 நவம்பர் 2021, 10:33 am

DIN

திருப்பூர்: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் புதியதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரிட்ஜ்வே காலனிகளை செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சி புதிய வார்டு எண் 31 பிரிட்ஜ்வே காலனி டிஎம்எஃப் பாலத்துக்கு வடமேற்கில் லட்சுமி நகர் ஈஸ்வரன் கோயில் அருகில் புதியதாக மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்ட மதுக்கடையை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது.

இதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்கள், தொழிலாளர்களின் பொது அமைதியை சீர்குலைக்கும். மேலும், பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். ஆகவே, பிரிட்ஜ்வே காலனி பகுதியில் மதுக்கடை அமைக்கும் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.