குழந்தைகளை தனித் திறமைகளைக் கண்டறிவோம்: முதல்வர் குழந்தைகள் தின வாழ்த்து
குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள்-ஒளிச்சுடர்கள் அவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை: குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள்-ஒளிச்சுடர்கள் அவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், இன்று நாடு முழுவதும், குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்!
குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!
குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்! என வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...