கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேலூரில் பொதுப்பணித் துறை கட்டட கோட்டம்: திறந்து வைத்தார் முதல்வர்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இ

News image

வேலூரில் பொதுப்பணித் துறை கட்டட கோட்டம்: திறந்து வைத்தார் முதல்வர்

Updated On :16 நவம்பர் 2021, 7:01 am

DIN

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 6495 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு வசதி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.