புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியிலும் புதன்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக தொடங்கி மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மையம் சார்பில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை(நவ.18) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளளார்.
இது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சிவகாமி விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


