சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள்தான் உண்மை. மற்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கோயம்பேடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள். பிற இணையதளத்தில் வெளியாகும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே, வேலை வாய்ப்புக்கு தகுதியுடையவர்கள், வேலை வாய்ப்பு தேடுபவர்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யான இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொய்யான இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இதற்கு எந்த விதத்திலும் இந்நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஜாம்ஷெட்பூர் 'ஹாட்ரிக்' வெற்றி
இமாலய வெற்றிக்கான தேவையுடன் இலங்கையை சந்திக்கும் பாகிஸ்தான்

பிராக் செஸ்: அரவிந்த் வெற்றி; குகேஷ் டிரா

28.2.1976: தமிழகத்தில் புது கல்விமுறை 4 ஆண்டு வரை அமலாகாது
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

