
அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில் பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவை தமிழிலும் இருந்தன. ஆனால் இப்பொழுது அவற்றிலிருந்து தமிழ் அகற்றப்பட்டுள்ளது.
உடனடியாக இந்தப் படிவங்களில் தமிழ் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டுகிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அஞ்சல் துறை பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், அஞ்சல் துறையில் பணவிடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பணவிடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.