மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ப்பு: வனத்துறைக்கு குவியும் பாராட்டு (விடியோ)

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி வனப் பகுதியில் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த குட்டி யானையை தாயுடன் சோ்க்கும் பணியில் வனத் துறையினா் வெற்றி கண்டுள்ளனர்.

News image
பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ப்பு: வனத்துறைக்கு குவியும் பாராட்டு
Updated On :7 அக்டோபர் 2021, 11:26 am

DIN

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி வனப் பகுதியில் தனது குடும்பத்திலிருந்து பிரிந்த குட்டி யானையை தாயுடன் சோ்க்கும் பணியில் வனத் துறையினா் வெற்றி கண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து தவறி அங்குள்ள குழியில் விழுந்துள்ளது. பின்னா் கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டன.

இதனைப் பாா்த்த வனத் துறையினா் குழியில் விழுந்த குட்டி யானையை மீட்டு பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மீண்டும் தாயுடன் சோ்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்த விடியோவை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வனத்துறையினர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக பிரிந்துச் சென்ற குட்டி யானை அதன் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டது. வனத்துறையினருக்கு இதயம்கனிந்த பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

தனது தாயைப் பார்த்ததும் அந்தக் குட்டி யானை ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டது. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு முறை கத்திவிட்டு, ஓடிச் சென்று தனது தாயுடன் சேர்ந்து கொண்டது. தனது தாயை அடையும் போது அது உற்சாகக் களிப்பில் பிளிரியது. 

இப்பணியில் ஈடுபட்ட சச்சின், வெங்கடேஷ் பிரபு, பிரசாத், விஜய், ஜார்ஜ் பிரவீன்சன், தம்பா குமார், அனீஷ், குமார், பந்தலுர் ஏபிடபிள்யு குழுவினருக்கு பாராட்டுகள் என்றும் சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.