கேரள வெள்ளம்: திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும்.
இந்த பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...