ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பொதுப்பணித்துறை செயல்பாடு: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News image

பொதுப்பணித்துறை செயல்பாடு: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Updated On :18 அக்டோபர் 2021, 1:29 pm IST


பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடு குறித்து  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றினை செயல்படுத்திய விபரம், நிலுவையிலுள்ள திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டியது தொடர்பாக இன்று (18.10.2021) காலையில் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவை, நிலுவையிலுள்ளவையின் விபரங்களை அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். இந்த ஆண்டு சட்டப் பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியது அனைத்தும் விபரமாக கேட்டறிந்தார்கள். இத்திட்டங்களை உடனடியாக ஆணை பிறப்பித்து பொது மக்களின் பயன்படுத்த தக்க வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் 
இதைப்போல, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இதில் எந்த பணியிலும் காலதாமதம் இருக்க கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.