/

தமிழகத்துக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் வருகின்றன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டிற்கு 1.04 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் மத்திய அரசு வழங்கவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழகத்துக்கு 1.04 கோடி தடுப்பூசிகள் வருகிறது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Updated On :28 ஜனவரி 2024, 4:04 am

DIN


புது தில்லி: தமிழ்நாட்டிற்கு 1.04 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் மத்திய அரசு வழங்கவுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், புது தில்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேரள மாநிலத்தையொட்டிய எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களை திறப்பது குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறினார். தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதர மையங்கள் அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன் வைத்தேன்.  தமிழ்நாட்டிற்கு 1.04 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதம் மத்திய அரசு வழங்கவுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.