ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதிதாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதிதாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் 31.08.2021 அன்று வெளியிடப்பட்டன. 
 மேற்கண்ட வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in யில் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற விவரங்களை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரியவாறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால், தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்புகொண்டு பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்ற தேவையான திருத்தங்களை செய்து கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com