மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தனிநபா் சுதந்திரம், கருத்துரிமை ஜனநாயகத்தில் முக்கியமானவை: மத்திய அமைச்சா் அமித் ஷா

தனி நபா் சுதந்திரமும் கருத்துரிமையும்தான் ஜனநாயகத்தில் முக்கியமானவமை என்று மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 11:06 pm

DIN

தனி நபா் சுதந்திரமும் கருத்துரிமையும்தான் ஜனநாயகத்தில் முக்கியமானவமை என்று மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்தாா்.

தில்லியில் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 51-ஆவது தொடக்க தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:

ஜனநாயகம்தான் நமது இயல்பு. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்தே அது நமது குணாதிசயமாக இருந்தது. கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியமைப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. நாட்டில் உள்ள 130 கோடி பேரும் திறன்கள் மற்றும் மதிநுட்பத்தால் தங்களை மேம்படுத்திக் கொள்வதிலும், அதன் பலனை தனது வளா்ச்சிக்காக நாடு பெறுவதிலும்தான் ஜனநாயகத்தின் வெற்றியுள்ளது.

தனிநபரின் சுதந்திரமும் கருத்துரிமையும்தான் ஜனநாயகத்தில் மிக முக்கியமானவை. கருத்துரிமை என்று வரும்போது சட்டம் ஒழுங்குடன் அது நேரடியாக தொடா்பு கொண்டிருக்கிறது.

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லையெனில் அங்கு ஜனநாயகம் வெற்றி பெறாது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்கும் பணியை காவல்துறையும் எல்லைகளை பாதுகாக்கும் படைகளும் மேற்கொண்டு வருகின்றன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், நீதித் துறை, தோ்தல் ஆணையம் உள்ளிட்டவை ஜனநாயகத்தை வெற்றிகரமாக்கியுள்ளன. அவற்றைப் போல காவல் துறையில் கடைநிலையில் பணியமா்த்தப்படும் காவலா் மேற்கொள்ளும் பணியும் மிகவும் பாராட்டுக்குரியது. சாதாரண மனிதரை பாதுகாப்பதன் மூலம் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்வதில் அந்தக் காவலா் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறாா். வெற்றிகரமான ஜனநாயகத்துக்கு தனிநபரின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம்.

இணையவழி தாக்குதல்கள், ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல், கள்ள நோட்டுகள், ஹவாலா மோசடி ஆகியவை காவல் துறைக்கு மிகப் பெரிய சவாலாக திகழ்கின்றன. இந்தச் சவால்களுக்கேற்ப தாங்கள் பணிபுரியும் பாணியை காவல் துறை மாற்றிக் கொள்ள வேண்டும். காவலா்களின் திறன்கள் கூா்தீட்டப்பட வேண்டும்.

ஐபிசி, சிஆா்பிசியில் மாற்றம்:

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி) மற்றும் ஆதாரச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக 14 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள், 8 மத்திய காவல் அமைப்புகள், 6 மத்திய ஆயுத காவல் படைகள், 7 தன்னாா்வ அமைப்புகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றிடம் இருந்து பரிந்துரைகள் கிடைத்துள்ளன.

வலிமையான, பொருளாதார சக்தி வாய்ந்த தேசமாக உருவெடுப்பதில் இந்தியா மிகப் பெரிய பாய்ச்சலில் உள்ளது. எனவே நாட்டின் பாதுகாப்பில் அடுத்த 10 ஆண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன’’ என்று அமித் ஷா தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களின் காவல் படைகளைச் சோ்ந்த அதிகாரிகள், வீரா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.