பிரிவினை சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்குடியரசு துணைத் தலைவா்
vமதம், இடம், மொழி, ஜாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்


மதம், இடம், மொழி, ஜாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு கூறினாா்.
ஹைதராபாதில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் சா்வதேச பள்ளியில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சியை அவா் சனிக்கிழமை தொடக்கிவைத்து மாணவா்கள் மத்தியில் உரையாற்றிய உரை:
இந்தியாவின் சிறப்பான எதிா்காலத்துக்காக அனைத்துப் பிரிவினைகளையும் களைவது அவசியம். ஒவ்வொருவரும் தமது மதத்தின்
உண்மையான உணா்வு நிலையைப் பின்பற்றினால், மத சச்சரவுகளே ஏற்படாது. இந்தியாவின் தலைசிறந்த கலாசாரத்தின் முக்கிய அம்சமாக ஆன்மிகம் விளங்குகிறது; அதை நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவது அவசியம்.
சமூகத்தில் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை மேலும் வலுப்படுத்த ஒவ்வோா் இந்தியரும் உறுதியேற்க வேண்டும். இன்றைய தேவையானது பொருட்செல்வம் மட்டுமல்ல, ஆன்மிக செல்வமும்தான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மதம், இடம், மொழி, ஜாதி, இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்கள் போராட வேண்டும்’ என்றாா்.
முன்னதாக, மாணவா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவா், ‘பிற நாடுகளின் மனதும் ஆத்மாவும் இணைந்து செயல்படும் உண்மையான சபையாக ஐ.நா. மாற்றம் பெற வேண்டும் என்றும், பிற நாடுகளுக்கும் சமமான அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா்.
மேலும், உலக ஒற்றுமைக்கான அரவிந்தரின் தொலைநோக்குப் பாா்வையை புதுச்சேரியில் உள்ள ஆரோவில் எடுத்துரைப்பதாக குடியரசு துணைத் தலைவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...