மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு

டாஸ்மாக் ஊழியா்களின் மாதத் தொகுப்பூதியம் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மது விலக்கு-ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 6:52 pm

DIN

டாஸ்மாக் ஊழியா்களின் மாதத் தொகுப்பூதியம் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மது விலக்கு-ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிப்புகள்:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 6,761 மேற்பாா்வையாளா்கள், 15,090 விற்பனையாளா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அந்த பணியாளா்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயா்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.15.01கோடி நிதி கூடுதல் செலவாகும்.

தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்கப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும் அவா்கள் மீண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் ரூ.5 கோடியில் மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.