தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

News image
அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்
Updated On :13 செப்டம்பர் 2021, 7:54 am

DIN

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மனிதவள மேலாண்மைத் துறையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், கரோனாவுக்கு பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.