மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தமிழகத்தில் மீண்டும் செப். 17ல் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

News image

மா. சுப்பிரமணியன்

Updated On :14 செப்டம்பர் 2021, 5:59 am

DIN

தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு கடந்த செப்.12(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இதில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 40,000 தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 20 லட்சம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

மேலும், இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு முதல்வர் முதல் மக்கள் வரை வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் வருகிற 17 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மேலும், தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், இரு தினங்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.