மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 8:21 am

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

அதிமுக சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

செப். 15 முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்.22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.