ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ராணிப்பேட்டையில் மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்களை பல்வேறு கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் திமுக கூட்டணி கட்சி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையிலுள்ள 7 ஒன்றியங்களிலும் மொத்தம் 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில், காங்கிரஸுக்கு 6, விசிகவுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 118 இடங்களில் திமுக போட்டியிடவுள்ளது.
மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 12 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
அமைச்சரும் ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான ஆர்.காந்தி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
நேபாளத்தில் சாலை விபத்தில் 7 தமிழா்கள் பலி! உடல்களை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை!
அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு: இருவா் கைது
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

