பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சி ஐஜி அலுவலகத்தில் பரபரப்பு:  2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

திருச்சி ஐஜி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை இருவர் தீக்குளித்து   தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

News image
திருச்சி ஐஜி அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற துரைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜு, சிவநடராஜன்.
Updated On :23 செப்டம்பர் 2021, 7:06 am

DIN

திருச்சி ஐஜி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை இருவர் தீக்குளித்து   தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜு, இவருடைய உறவினர் சிவநடராஜன் இருவரும் வியாழக்கிழமை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐ.ஜி  அலுவலகம் வந்தனர். பின்னர் திடீரென அலுவலகம் முன், தங்களது உடலில்  மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.  இதனை அடுத்து  அங்கிருந்த போலீசார் ஓடிச்சென்று  அவர்களை  தடுத்து நிறுத்தி ,  தண்ணீரை ஊற்றி  தற்கொலை முயற்சியை  கைவிடச் செய்தனர். 

இது குறித்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்த நிலையில் அதற்கு ஈடாக தங்களது நிலத்தை கொடுத்துள்ளனர். கடனை திருப்பி செலுத்திய நிலையிலும் நிலத்தை திருப்பி தரவில்லையாம். 

இதுகுறித்து  நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்து 2 ஆண்டு காலமாக பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளனர்.

மேலும் கே.கே.நகர்  போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.