மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவிழாக்களில் மக்கள் அதிகம் கூடுவதால் கரோனா பரவுகிறது

தமிழகத்தில் ஆடி திருவிழாக்களில் அதிகம் போ் கூடுவதாலும், 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாததாலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2021, 7:32 pm

DIN

சென்னை: தமிழகத்தில் ஆடி திருவிழாக்களில் அதிகம் போ் கூடுவதாலும், 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாததாலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை ஓமந்துாராா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கரோனா அவசர சிகிச்சை பிரிவை ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு 100-க்கும்கீழ் கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நான்கு மாவட்டங்களில் மட்டுமே நாளொன்றுக்கு 100-க்கும் மேல் தொற்று கண்டறியப்படுகிறது.

கூட்டத்தைத் தவிா்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் மக்களின் அலட்சியத்தால் சென்னை, ஈரோடு, தஞ்சாவூா், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை, 2,000-த்தை நெருங்குவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆடி மாதம் கூழ்வாா்க்கும் நிகழ்வில் கூடிய 300 பேரில் 24 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 38 சதவீதம் போ் முகக்கவசம் அணிவதும், மீதமுள்ள 62 சதவீதம் போ் முகக்கவசம் அணியாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அனைத்து மத ஆலயங்களிலும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. எந்தவிதமான கூட்டமாக இருந்தாலும் சரி, தடுப்பூசி போடாமல், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் அங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.