ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

சென்னையில் 49 இடங்களில் இலவச 'வை-பை' வசதி

சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் மக்கள் இலவச வை-பை வசதியைப் பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Published On :

சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் மக்கள் இலவச வை-பை வசதியைப் பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேம்பாலங்களுக்குக் கீழ் பூங்கா, சுவரொட்டிகள் அகற்றம், மரம் நடுதல் என பல பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 

இத்திட்டத்தில் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை மழை, வெள்ளப்பெருக்கு, கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட பல தகவல்களுக்காக ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. ரிப்பன் மாளிகையில் இதற்கான கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. 

இந்நிலையில் சென்னை மாநகரில் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களில் உள்ள ‘வை-பை’ வசதியை பொதுமக்கள் இலவசமாக 30 நிமிடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்து ஒடிபி கொண்டு சரிபார்த்து பின்னர் சேவையைப் பெறலாம். 

மேலும், எந்தெந்த இடங்கள் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.