பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இந்த ஆட்சி பணியாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இந்த ஆட்சி பணியாற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இந்த ஆட்சி பணியாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இந்த ஆட்சி பணியாற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
கொளத்தூர், எவர்வின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் தையல் பயிற்சி கொடுத்து, அதனால் ஆயிரம் பேருக்கும் மேல் பயனடையக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. 
பெண்களுடைய முன்னேற்றத்திற்கு, மகளிருடைய வாழ்விற்கு எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை இப்போது ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல, தொடர்ந்து கருணாநிதியுடைய காலத்தில் 5 முறை ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது, இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கழக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களையெல்லாம் தீட்டி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். 

இப்போது நான் முதலமைச்சராக பொறுப்பில் இருக்கிறேனென்றால், இன்று இங்கு வந்திருக்கக்கூடிய சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, செந்தில் பாலாஜியாக இருந்தாலும் சரி, நாங்களெல்லாம் அமைச்சர்களாக இன்றைக்கு இருக்கிறோமென்றால் இந்த ஆட்சியை உருவாக்கித் தந்தவர்கள் நீங்கள், தமிழ்நாட்டு மக்கள். தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம், எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இலவசமாக பயணம் செய்யலாம். இங்கே கூட இந்த சான்றிதழ்களை வாங்க வந்த சகோதரிகளும், தாய்மார்களும் ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி, நாங்களெல்லாம் பேருந்தில் இலவசமாக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சொன்னீர்கள். 
இப்படி பெண்களுடைய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து நிச்சயமாக, உறுதியாக இந்த ஆட்சி பணியாற்றும், தேர்தல் நேரத்தில் தந்திருக்கக்கூடிய உறுதிமொழிகளையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற உறுதியை மீண்டும் உங்களுக்கு எடுத்துச்சொல்லி, இன்றைக்கு சான்றிதழை பெற்றிருக்கக்கூடிய நீங்கள் மகிழ்ச்சியோடு அதை வாங்கியிருக்கிறீர்கள், அந்த மகிழ்ச்சி தொடரவேண்டும், அது தொடர்வதற்கான எல்லா முயற்சிகளையும் திமுக ஆட்சி செய்யும், செய்யும் என்ற உறுதியைச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் சொல்லி என் உரையை முடிக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com