ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 4:32 pm

DIN

பாராலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் 
மாரியப்பன் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. 

ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார். 

இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், முன்பு ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

இந்நிலையில், பதக்கம் வென்ற பிறகு வீடியோ மூலமாக பேசிய மாரியப்பன், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.