சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கே அவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்க ஏற்பாடு சய்யப்பட்டுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எனவே, தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ள கிராமப்புற மாணவர்கள், எங்கும் அலைய வேண்டியதில்லை. அவர்கள் பள்ளியில் அளித்த செல்லிடப்பேசி எண்ணுக்கே மதிப்பெண் விவரங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறியது கொள்ளலாம்.
1. www.tnresults.nic.in
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in
குறுஞ்செய்தி அனுப்பப்படும்: மாணவா்கள், பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும் தோ்வு முடிவு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜூலை 22-இல் பதிவிறக்கம்: பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



