ரேசன் கடை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

ரேசன் கடை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ரேசன் கடை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

ரேசன் கடை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் சேலம் மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று  நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர், கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ரூ.11,500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது ரேசன் கடைகளில் 3,997 காலிப் பணியிடங்கள் உள்ளன. இது விரைவில் நிரப்பப்படும். ரேசன் கடைகளில் பணி நியமனம் வெளிப்படையாக இருக்கும். 

அனைத்து விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து கடனுதவிகள் வழங்கப்படும்.

குடும்ப அட்டை இல்லாவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும். கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருள்கள் தொகுப்பு 99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com