மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தடுப்புப் பணி: தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபட வலியுறுத்தல்

உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :5 மே 2021, 12:17 pm

DIN


உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மருத்துவ அவசர நிலை என சொல்லக் கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையம் தொடங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கட்டளை மையத்தை (war room) உடனே திறக்க தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு மக்கள் சேவையாக மாறிவிட்டது. போர்க்காலத்தில் செயல்படுவதைப் போல மருத்துவர்கள் செயல்பட்டு சேவையாற்றுகிறார்கள்.

உயிர் பாதுகாப்பிற்கு அவசியமற்ற அறுவை சிகிச்சைக்கு ஒதுக்காமல் கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.  ஆக்ஸிஜன் படுக்கை விவரங்களை தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கட்டணச் சலுகை தர வேண்டும்:

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு கருணைகாட்டி அவர்கள் உயிரைச் செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும்.

இது கடினமான காலம். ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல. ஒவ்வொரு உயிரும் உன்னதமானது.

அனைவரும் ஒன்றிணைந்து முழுமையாக செயல்பட்டால் மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைக்க இயலும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.