சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

சென்னையில் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்தெந்த சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது என்பது குறித்து அறியும் வகையில், சென்னை போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவ
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு


சென்னையில் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்தெந்த சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது என்பது குறித்து அறியும் வகையில், சென்னை போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1. மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்

i) வியாசர்பாடி சுரங்கபாதை
ii) கணேஷபுரம் சுரங்கபாதை
iii) அஜாக்ஸ் சுரங்கபாதை
iv) மேட்லி சுரங்கபாதை
v) துரைசாமி சுரங்கபாதை
vi) காக்கன் சுரங்கபாதை ( இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ)

2. மழை நீர் தேங்கியுள்ள சாலையின் பெயர்கள்:-(போக்குவரத்து நடைபெறுகிறது )
 

i) ஈவிஆர்-சாலை - அழகப்பா சாலை
ii) கால்நடை மருத்துவமனை - வேப்பேரி சாலை மசூதி
iii) பர்னபி (ஈவிஆர்-சாலை) மற்றும் என்எல்சி
iv) பிரிக்லின் சாலை
v) கடற்கரை சேவை சாலை (மூடப்பட்டது)
vi) ஆர்.ஆர் ஸ்டேடியம்
vii) வள்ளுவர் கோட்டம் மற்றும் பள்ளி சாலை
viii) என்எச்- கேஎஸ் ; முழ ஸ்டெர்லிங் ரோடு முதல் லயோலா கல்லூரி வரை
ix) கூகூமு சாலை, எல்டாம்ஸ் சாலை, தபால் காலனி
x) ராம் தியேட்டர் - வடபழனி
xi) பெரியார் பாதை
xii) 100 அடி சாலை பல்லவா மருத்துவமனை
xiii) பசுல்லா சாலை- வடக்கு உஸ்மான் சாலை
xiv) வாணி மஹால், ஜிஎன் செட்டி, விஆர் சாலை
xv) அருணாச்சலம் சாலை
xvi) ஞகூ.ராஜன் , காமராஜ் சாலை
xvii) ஐஐஐ கிராஸ், கஸ்தூரி பாய் நகர், இந்திரா நகர்
xviii) கற்பககா தோட்டம்
xix) விஜய நகர்
xx) முகமது சதக் கல்லூரி
xxi) விடுதலை நகர் கைவலி முதல் மடிப்பாக்கம் சதா சிவம் நகர்
xxii) து10 குளோபல் மருத்துவமனை
xxiii) மணலி எக்ஸ்பிரஸ் சாலை- சாத்தான்காடு முதல் எம்.எப்.எல் சந்திப்பு

3. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
 

i) கே,கே நகர் - ராஜ மன்னார் சாலை
ii) மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை
iii) செம்பியம் - ஜவஹர் நகர்
iv) பெரவள்ளுர் - 70 அடி சாலை
v) புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு
நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு
vi) வியாசர்பாடி - முல்லை நகர் பாலம்
vii) சென்னை கோட்டை இரயில் நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம்
செல்லும் வழி.
viii) பெரும்பாக்கம் சாலை – பெரும்பாக்கம் சர்ச் முதல் சோழிங்கநல்லூர் செல்லும் வழி.

4. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு

இதையும் படிக்கலாமே.. கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு கிடைக்கும்?

i) வடபழனி முதல் கோயம்போடு செல்லும் 100 அடி சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
ii) மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும் இலகு ரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்ட் மேரிஸ் சாலை வழியாக அனுப்பப்படுகிறது.

5. சாலையில் பள்ளம்

திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்–பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

6. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்
பெரம்பூர் பேரக்ஸ் சாலை–அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் ,மாநகரப்பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பிரிக்கிளின் ரோடு, ஸ்டிராஹன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் ரோடு, பிரிக்கிளின் ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும். 

7. மரங்கள் ஏதும் விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com