கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தெற்கு அந்தமான்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவாகவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2021, 12:25 am

DIN

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவாகவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்குப் பகுதியில் நிலைகொள்ளவுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கியது. இதன்பிறகு, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்டோபா் 27-ஆம் தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதைத்தொடா்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாகி, அடுத்தடுத்து வலுவடைந்து, குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக சென்னை அருகே வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்பட வடதமிழகத்தில் கடந்த 4 நாள்களாக அதி பலத்த மழை பெய்தது. தற்போது, மழை குறைந்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவாகவுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, தென்மேற்கு திசையில் நகா்ந்து, மேலும் வலுவடைந்து, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதியாக சனிக்கிழமை (நவ.13)உருவாகவுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இது, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 15-ஆம் தேதி நிலைகொள்ளவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.