திருவள்ளுர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் சாலை தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
தற்போதைய நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த 3 நாள்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு மற்றும் திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது.
இதனால், இந்த மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதேபோல், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
மழை அளவு: அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: பொன்னேரி-59, செங்குன்றம்-52, சோழவரம்-51, திருவள்ளூர்-36, ஆவடி-33, தாமரைபாக்கம்-32, திருத்தணி-24, கும்மிடிப்பூண்டி-23, ஊத்துக்கோட்டை, பூண்டி தலா-21, திருவாலங்காடு-20, ஜமீன்கொரட்டூர்-18, பூந்தமல்லி-16, ஆர்.கே.பேட்டை-14, பள்ளிப்பட்டு-5 என மொத்தம் 425 மி.மீ, சராசரியாக-28.33 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | ஒமைக்ரான் வகை கரோனாதென் ஆப்பிரிக்க அதிபா் அவசர ஆலோசனை
ஏரிகளில் நீர்ம்டடம்: இந்த தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது 2709 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில், 4253 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்படும்.
செங்குன்றம் ஏரியில் 2831 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில், 1695 கன அடிநீரும், சோழவரம் ஏரியில் 851 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில் 1415 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடி இருப்புள்ள நிலையில் 156 கன அடி என உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய திமுகவினர்!

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!

புதுச்சேரி முதல்வராக வரும் 13-ல் பதவியேற்கும் என். ரங்கசாமி!
மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

